தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரியில் அமமுக தொண்டர்களுக்கு வலை விரிக்கும் அதிமுக! - முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

தர்மபுரியில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள அமமுக அதிருப்தி தொண்டர்களை, அதிமுகவில் இணைக்கும் பணியில் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமமுகவினர் திமுகவில் இணைவது தொடர்பான காணொலி
அமமுகவினர் திமுகவில் இணைவது தொடர்பான காணொலி

By

Published : Jul 25, 2021, 6:44 PM IST

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அமமுகவில் இருந்து விலகினார். இந்நிலையில் பழனியப்பன் ஆதரவாளர்கள் பலர் அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைய தயக்கம் காட்டிவருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்தனியாக பொறுப்பாளர்களை நியமித்து, அமமுக அதிருப்தியாளர்களை, அதிமுகவில் இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

தனித்தனி பொறுப்பாளர்கள் நியமிப்பு

அரூர் பகுதிக்கு அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத் குமாரும், பென்னாகரம் தொகுதிக்கு அதிமுக விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகனும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமியும், தர்மபுரி, பாலக்கோடு ஆகிய தொகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமமுகவினர் திமுகவில் இணைவது தொடர்பான காணொலி

இந்நிலையில் இன்று (ஜூலை 25) பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அமமுக அதிருப்தியாளர்கள், அதிமுகவில் இணைந்தனர்.]

விரைவில் பழனியப்பன் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

ABOUT THE AUTHOR

...view details