தருமபுரி மாவட்ட விவசாயிகள்ஆடி மாத பயிர்களுக்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளனர். ”ஆடிப்பட்டம் தேடிவிதை” என்பது பழமொழி. ஆடி மாதம் தானிய விதைப்புக்கு ஏற்ற மாதம். இம்மாதங்களில் பெய்யும் மழைநீரைக் கொண்டு விவசாயிகள் மேட்டு நிலங்களில் தானியங்களை விதைத்து அறுவடை செய்வது வழக்கம்.
விவசாயம் சார்ந்த மாவட்டமான தருமபுரியில் பெரும்பான்மையான நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாக உள்ளது. மேட்டுப்பாங்கான நிலப்பரப்பில் விவசாயிகள் ஆடி மாதத்தில் விட்டுவிட்டு பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி தங்கள் நிலங்களை சமன்படுத்திவருகின்றனர். ஆடி மாதத்தில் தானியங்களை விதைத்தால் அதிக அளவு மகசூல் தரும் என்பது நம்பிக்கை.