தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் விவசாயக் கண்காட்சியை திறந்துவைத்த எம்எல்ஏ! - கால்நடை சார்ந்த தீவனப்பயிர்கள்

தருமபுரி: விவசாய கருவிகள் மற்றும் விதை கண்காட்சியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி திறந்துவைத்தார்.

Agricultural Equipment and Seed Exhibition in Dharmapuri: Members of the Legislature Open!
Agricultural Equipment and Seed Exhibition in Dharmapuri: Members of the Legislature Open!

By

Published : Feb 17, 2021, 2:50 PM IST

தருமபுரி மதுரபாய் சுந்தர ராஜா ராவ் திருமண மண்டபத்தில் விவசாய பயன்பாட்டுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நவீன கண்டுபிடிப்பு கருவிகள், கால்நடை சார்ந்த தீவனப்பயிர்கள், பால் கறக்கும் எந்திரங்களின் கண்காட்சி இன்று (பிப்.17) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

தருமபுரியில் விவசாய கருவி, விதை கண்காட்சி

கண்காட்சியில் பண்ணை கருவிகள், உழவு எந்திரங்கள், தோட்டக்கலை தொழில்நுட்பம், நீர் பாசன கருவிகள், சொட்டு நீர் தெளிப்பு கருவிகள், பம்பு செட்டுகள், சோலார் பம்பு செட்டுகள், நிழல் வலைகள், இயற்கையாக வளரும் கீரை விதைகள், கோழி கால்நடை தீவனங்கள், இயற்கை விவசாயம் குறித்த தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள் இக்கண்காட்சியை பார்வையிட்டு புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு -11 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details