திருப்பதியிலிருந்து தருமபுரி வழியாக சேலம் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனா். அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி இருவரும் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து ஆசீா்வாதம் பெற்றனா்.
அதிமுக தருமபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் மலர்கொத்து வழங்கியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொணடர்கள் வரிசையாக வந்து முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்தனர்.
முதலமைச்சர் பழனிசாமிக்கு தருமபுரி எல்லையில் உற்சாக வரவேற்பு பொறுமையுடன் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து காவல் துறை பாதுகாப்புடன் சேலம் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து