தர்மபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளும் அதிமுக கூட்டணியின் வசமாகியுள்ளது. பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.அன்பழகன் 29,035 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பி.கே.முருகனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல், அரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சம்பத்குமார் 30,362 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் குமாரை வீழ்த்தி வென்றுள்ளார்.
பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜி.கே.மணி 22,358 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் இன்பசேகரனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.