தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தருமபுரி நகரப்பகுதி அதிமுக பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதிமுகவினர் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்தப் பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளைச் சந்தித்து, ஆலோசனை செய்து போட்டியிடும் நபர்களை தேர்ந்தெடுத்து உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றும் அறிவுருத்தினார்.