தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாப்பிரெட்டிபட்டி கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவேன்: அதிமுக வேட்பாளர் - papi redipatti

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையிலிருந்து கால்வாய் நீட்டிப்பு திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோவிந்தராஜ் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் உறுதியளித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் கோவிந்தராஜ்

By

Published : Apr 5, 2019, 11:57 PM IST

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி இன்று 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது ஈடிவி பாரத்திற்காக பிரத்யேகமாக பேட்டியளித்த கோவிந்தசாமி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும், பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையிலிருந்து கால்வாய் நீட்டிப்பு திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.

அரூர் முதல் சேலம் செல்லக்கூடிய சாலை தற்போது சேதமடைந்துள்ளது என்று கூறிய அவர், சாலையை செப்பனிட்டு நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதனை மிக வேகமாக செய்து பொது மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவேன் என்றும் உறுதி அளித்தார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியினர் கூட்டணி கட்சியினர் தமக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி முழுவதும் உற்சாகமாக வரவேற்பு அளித்தாக தெரிவித்தார்.

மேலும், மக்களின் தேவை அறிந்து செயல்படக்கூடிய கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால், தங்களுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details