தருமபுரி:தருமபுரி அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தடங்கம் கிராமத்தில் ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் நடும் நிகழ்ச்சி இன்று (ஜன.2) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவர் தாபா சிவா, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் சட்டமன்ற பேரவை உறுப்பினரும் தருமபுரி திமுக மாவட்ட செயலாளருமான தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கால்கோள் நட்டனர்.