தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனிசாமி ஒரு பல்லி சாமி: நடிகர் ரஞ்சித் கிண்டல்! - அமமுக வேட்பாளர்

தருமபுரி: பதவிக்காக சசிகலா காலில் விழுந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, பழனிச்சாமி என்பதற்கு பதிலாக பல்லி சாமி என்று பெயர் வைத்திருக்கலாம் என அமமுக பேச்சாளர் நடிகர் ரஞ்சித் பரப்புரையில் பேசியுள்ளார்.

நடிகர் ரஞ்சித்

By

Published : Apr 12, 2019, 11:17 PM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பழனியப்பனை ஆதரித்தும், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்தும் தருமபுரி பெரியார் சிலை அருகே நடிகர் ரஞ்சித் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையின் போது அவர் பேசியதாவது, சாதியாலும் மதத்தாலும் பிரித்து ஆளக்கூடிய கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டாம். கொள்கை இல்லாத கோட்பாடு இல்லாத மானங்கெட்ட கூட்டணி அதிமுக கூட்டணி என்றும், பிரச்சார மேடையில் செருப்பு வீச்சுக்கூட கவலைப் படாதவர்கள் இவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித்

அன்புமணி மாற்றம், மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று பேசிவிட்டு திருடர்களாக இருக்கிறார்கள். தானும் அந்த கட்சியில் இருந்ததாகவும் பல போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தற்போது மேடையில் ஒலிவாங்கியை பிடிப்பதற்கு வெக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மது ஒழிப்பு, மணல் கொள்ளையைத் தடுப்போம் என்று சொல்லிவிட்டு ரூ. 400 கோடிக்காக கெஞ்சி, இவர்கள் சமுதாயத்தை காட்டி காசு வாங்குகிறார்கள் என்று மறைமுகமாக பாமகவை குற்றஞ்சாட்டினார்.

பதவிக்காக சசிகலா காலில் விழுந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பழனிச்சாமி என்பதற்கு பதிலாக பல்லி சாமி என்று வைத்திருக்கலாம் என நகைச்சுவையாக பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details