தர்மபுரி:சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த மேடை பின்னணிப் பாடகர் மூக்குத்தி முருகன் தர்மபுரி மாவட்டம், சிவாடி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம், தொப்பூர் சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றைப் பாடி இருந்தார்.
மூக்குத்தி முருகன் பாடிய பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி லாரி ஓட்டுநர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. லாரி ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மூக்குத்தி முருகனுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பேசிய மூக்குத்தி முருகன், 'தொப்பூர் சாலையில் ஆறு வகையான விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டினால் விபத்தில்லாமல் பயணிக்க முடியும்’ என்றார்.
தொப்பூர் சாலையில் விபத்தைத் தடுக்கலாம்.. அறிவுரை வழங்கிய சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் மேலும் அவர் தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வரையறை செய்துள்ள பாதுகாப்பான வாகன ஓட்டும் வழிமுறைகளை எடுத்துக்கூறி வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், தொப்பூர் சுங்கச்சாவடி ஞானசேகர் மற்றும் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மாநில அரசின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் - முதலமைச்சர்