தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு ஆதார் கார்டுக்கு, ஒரு ஃபுல் - ஜோராக நடைபெற்ற மது விற்பனை! - ஒரு ஆதார் கார்டுக்கு, ஒரு ஃபுல்: தர்மபுரியில் ஜோராக நடைபெற்ற மது விற்பனை!

தர்மபுரி: ஒரு ஆதார் கார்டுக்கு, நான்கு குவார்ட்டர் என்ற வீதத்தில் தர்மபுரியில் படு ஜோராக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு ஆதார் கார்டுக்கு, ஒரு புல்
ஒரு ஆதார் கார்டுக்கு, ஒரு புல்

By

Published : May 7, 2020, 7:16 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் சென்னையைத் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 40 நாட்களுக்குப் பிறகு மதுபான கடைகள் திறக்கப்படுவதால், மதுபிரியர்கள் காலை முதல் டாஸ்மாக் கடையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 65 கடைகளில், 54 டாஸ்மாக் கடைகள் மட்டும் இயங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து பத்து மணிக்கு திறக்கப்படும் மதுபான கடைகள் முன்பு, மதுபிரியர்கள் ஒன்பது மணிக்கே குவிந்தனர். அவர்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து மதுபானம் வாங்கிச் செல்கின்றனர்.

ஒரு ஆதார் கார்டுக்கு, ஒரு ஃபுல்

மேலும் மதுபானம் வாங்க வருபவா்கள், தங்கள் ஆதார் கார்டு அட்டையைக் காண்பித்து, ஆதார் எண் பதிவு செய்த பின்பு அலுவலர்கள் டோக்கன் வழங்குகின்றனா். ஒரு நபருக்கு தலா நான்கு குவார்ட்டர்கள் வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுபான கடைகளில் கூட்ட நெரிசல்களைத் தவிர்க்க மாவட்டம் முழுவதும், ஒரு கடைக்கு 6 ஊழியர்கள் வீதம் 347 பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் அமைத்துள்ளது.

இதையும் படிங்க:நிவாரண அரிசி வழங்க 2000 டன் நெல் ரயில் மூலம் வந்தது

ABOUT THE AUTHOR

...view details