தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - இறந்தவரின் உடலை மீட்ட தீயணைப்புத்துறை

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே குளிக்கச் சென்ற இளைஞர் 65 அடி ஆழ கிணற்றில், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், இறந்தவரின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

death
death

By

Published : Nov 2, 2020, 7:53 AM IST

தருமபுரி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தில், ராஜமாணிக்கம் என்பவரின் மகன் தங்கம் (19). இவர்ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். கிணற்றில் குதித்த தங்கம் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பதற்றமடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.

உடனடியாக தீயணைப்பு மீட்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு இறந்தவரின் சடலத்தை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தங்கத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், தங்கம் தனியார் கல்லூரியில், சுகாதார ஆய்வாளர் பயிற்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். 65 அடி ஆழ கிணற்றில் குளிக்கச் சென்று உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க:10 நாள்கள் இடைவெளியில் காவலர் பயிற்சி வளாகத்துக்குள் இரண்டு நகைப் பறிப்பு சம்பவங்கள் : பீதியில் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details