கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கோவைப்பள்ளம் பீட்டில் நிரந்தரமாக வாழக்கூடிய காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன. இந்த காட்டுயானைகளில் ஒரு கர்ப்பிணி யானை கடந்த 2 நாட்களாக குட்டியை பெற்றெடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளது. இந்த நிலையில், வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் அந்த கர்ப்பிணி யானை உயிரிழந்து கிடந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
ஓசூரில் குட்டியை பெற்றெடுக்க முடியாமல் உயிரிழந்த யானை - தாய் காட்டுயானை உடலை அதே இடத்தில் புதைக்காமல் சிறு உயிரினங்களுக்கு உணவாக விட்டு வந்தனர்
ஓசூரில் அருகே குட்டியை பெற்றெடுக்க முடியாமல் பெண் காட்டு யானை உயிரிழந்தது.
குட்டியை பெற்றெடுக்க முடியாமல் உயிரிழந்த காட்டு யானை
அதனடிப்படையில், வனத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் உடன் சம்பவயிடத்திற்கு விரைந்து, யானையின் உடலை உடற்கூராய்விற்கு உட்படுத்தினர். அப்போது குட்டியும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து யானையின் உடலை அங்கேயே விட்டு, குட்டியின் உடலை மட்டும் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
இதையும் படிங்க: உரிமை கோரப்படாத 9 சடலங்கள் ...தன்னார்வலர்கள் மூலம் நல்லடக்கம்