தருமபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (70). இவர் தன் மகன் வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில், இன்று (அக். 22) வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு, அவரது கழுத்திலிருந்து 5 சவரன் நகையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வீட்டிற்கு வந்த அவரது மகன் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.