தருமபுரி: அரூர் கோயில் குளத்தில் தவறி விழுந்த இளைஞர், 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
தருமபுரி மாவட்டம், அரூர் வர்ணதீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (37). இவருக்கு சுமதி என்ற மனைவியும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், 15 நாள் கை குழந்தையும் உள்ளது. இவர் பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
அரூர் கோயில் குளத்தில் தவறி விழுந்த இளைஞர் - 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உடல் மீட்பு
கோயில் குளம் முழுக்க பச்சை பாசி படர்ந்திருந்ததால், தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது. பிறகு குளத்தில் கேமரா செலுத்தி டிவி மூலம் கண்காணித்து பாஸ்கரன் உடலை 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்டெடுத்தனர்.
பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வருணேஸ்வரன் கோயிலில் உள்ள 30 அடி ஆழ குளத்தில் குடிபோதையில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த கோயில் பூசாரி லோகநாதன், அருகிலிருந்த ஏணியை கொடுத்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதையடுத்து
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் தீயணைப்பு அலுவலர் பழனிசாமி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து குளத்தில் இறங்கி பாஸ்கரன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேடும் பணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோயில் குளம் முழுக்க பச்சை பாசி படர்ந்திருந்ததால், தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது.
பிறகு குளத்தில் கேமரா செலுத்தி டிவி மூலம் கண்காணித்து பாஸ்கரன் உடலை 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்டெடுத்தனர். அரூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட உடலை அரூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனா்.