தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

40 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: பரிசல் ஓட்டி கைது! - பரிசல் ஓட்டி கைது

தருமபுரி: பென்னாகரம் அருகே ஒகேனக்கல் மாறு கொட்டாய் பகுதியில் 40 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பரிசல் ஓட்டியை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

By

Published : Dec 17, 2020, 9:29 PM IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மாறு கொட்டாய் பகுதியைச் சேர்ந்த உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் (டிச.15) இரவு 7:30 மணியளவில் பரிசலில் சென்றுள்ளார்.

பரிசலை மாறு கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பரிசலில் சென்ற பெண்ணை மூர்த்தி பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிய பெண் இச்சம்பவம் குறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பரிசல் ஓட்டி மூர்த்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டி ஒருவர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இணங்க மறுத்ததால் பேருந்து உரிமையாளர் ஆத்திரம்!

ABOUT THE AUTHOR

...view details