தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது! - கஞ்சா விறபனையாளர் கைது

தருமபுரி: பாலக்கோடு அருகே தொடர்ந்து சட்டவிரோத செயல்களை செய்துவந்த நபரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது
தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

By

Published : Feb 15, 2021, 1:30 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முத்துராமன் (42). இவர் மீது தொடர்ந்து பாலக்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்து வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் பரிந்துரை செய்தார்.

பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, முத்துராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாலக்கோடு காவல் துறையினர் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: போலீஸுக்கே லந்து கொடுத்த போதை ஆசாமி !

ABOUT THE AUTHOR

...view details