இந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாக வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் எகிப்து நாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளன.
தருமபுரி மாவட்டத்திற்கு கூட்டுறவு அங்காடி மூலம் மலிவு விலையில் விற்பனை செய்வதற்காக 5 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்று (அக். 31) தருமபுரி பேருந்து நிலையம் அருகேயுள்ள கூட்டுறவு அங்காடியில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.