தர்மபுரி:பென்னாகரம் அருகேயுள்ள மஞ்சநாயக்கனஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட நரசிபுரம் இடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் பெட்ரோல் ஊற்றி பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனை அப்பகுதியில் உள்ள மாடு மேய்க்கும் முதியவர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து சென்ற பெரும்பாலை காவல் துறையினர் மற்றும் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மோப்பநாய் உதவியுடன் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலமாகத் தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.