தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Thunivu: 6 மாத தாடி; அஜித் கெட்டப்பில் வந்த ரசிகர்! - அஜித்

தருமபுரியில் துணிவு (thunivu) படத்திற்காக அஜித் போலவே தோற்றமளிக்க ரசிகர் ஒருவர் 6 மாதமாக தாடி வளர்த்து தியேட்டருக்கு வந்து அனைவரையும் மகிழ்ச்சி படுத்தினார்.

Thunivu movie release: 6 மாத தாடி; அஜித் கெட்டப்பில் வந்த ரசிகர்!
Thunivu movie release: 6 மாத தாடி; அஜித் கெட்டப்பில் வந்த ரசிகர்!

By

Published : Jan 11, 2023, 2:22 PM IST

Thunivu movie release: 6 மாத தாடி; அஜித் கெட்டப்பில் வந்த ரசிகர்!

தருமபுரி: நகரப் பகுதியில் 4 திரையரங்குகளில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த துணிவு 'thunivu' படம் திரையிடப்பட்டது. காலை 7 மணி காட்சியில் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கம் முன்பு கூடி நின்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி நகரப்பகுதியைச் சேர்ந்த தல நந்தா என்ற அஜித் ரசிகர் துணிவு படம் ரிலீஸ்க்காக கடந்த ஆறு மாதங்களாக அஜித் போலவே தாடி மற்றும் முடி வளர்த்து இன்று திரைப்படத்திற்கு வந்திருந்தார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளாகவே அஜித் படம் வெளியாகும் போது அஜித் கெட்டப்பிலேயே வந்து படம் பார்க்கும் வழக்கத்தை வைத்துள்ளார். ஏராளமான ரசிகர்கள் தல நந்தாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பேசிய ரசிகர்கள் மனித கடவுள் அஜித் மட்டுமே என்று ஆவேசமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: வீடியோ: துணிவு பட வெளியீட்டை தெறிக்க விட்ட நெல்லை பாய்ஸ்

ABOUT THE AUTHOR

...view details