நவராத்திரியின் சிறப்பம்சம் கொலு வைப்பதாகும். கொலு என்பது ஒன்பது படிகளைக் கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். முதலாம் படி, ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.
இரண்டாம் படி, இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளும், மூன்றாம் படி, மூன்று அறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள். நான்காம் படி, நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு உள்ளிட்டவற்றின் பொம்மைகள்.
44 ஆண்டுகளாக நவராத்திரி வழிப்பாடு ஐந்தாம்படி, ஐந்தறிவுள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள். ஆறாம்படி, ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள். ஏழாம்படி, மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், முனிவா்கள், மகான்கள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள். எட்டாம் படி, தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
ஒன்பதாம் படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி பொம்மைகள் வைக்கப்பட்டு கொலு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம் என்கிறார்கள் இக்குடும்பத்தினர்.
இதில் தருமபுரி பிடமனேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியர் வெங்கடேசன் குடும்பத்தினர், கடந்த 44 ஆண்டுகளாக 40 ஆயிரம் கொலு பொம்மைகளை வைத்து வணங்கிவருகின்றனர்.