தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஜக்கசமுத்திரம் அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் இன்று (பிப். 22) தனது காதல் கணவருடன் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் தான் கடந்த ஒரு வருடமாக மணி என்பவரை காதலித்து வந்ததாகவும், இதற்குச் சாதியை காரணம் காட்டி பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது திருமணத்தால் கணவன் மணி குடும்பத்தினரை அக்காள் கணவர் அச்சுறுத்தி வருவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தனக்கும் தன் கணவர் மணி குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், மகேந்திர மங்கலம் காவல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் மனு அளித்துள்ளார்.