கர்நாடக மாநிலத்தில் சென்ற வாரம் பெய்த மழையின் காரணமாக காவிரி அணையிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
மேலும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து சென்ற மூன்ற நாள்களாகத் திறந்துவிடப்பட்ட நீரின் மூலமாகவும் ஒகேனக்கல் பகுதிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து சரிவு இந்நிலையில் கர்நாடக பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு குறைத்துக் கொண்டது.
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 10) 30 ஆயிரம் கனஅடி நீரும் இன்று (ஆகஸ்ட் 11) 21 ஆயிரத்து 582 கனஅடி நீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது காவிரி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து இன்று ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியிலிருந்து 70 ஆயிரம் கனஅடி நீர் குறைந்து 50 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: காவிரியில் வெள்ளப்பெருக்கு: அடித்துவரப்பட்ட முதலையால் மக்கள் பீதி