தர்மபுரி:தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக - தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது.
இதனிடையே தமிழ்நாடு நீர்பிடிப்புப்பகுதிகளான, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாபாளையம் உள்ளிட்டப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது.