தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய அளவிலான கைப்பந்து இறுதிப்போட்டியில் மேற்கு வங்காள அணி வெற்றி! - தேசிய அளவிலான கைப்பந்து இறுதிப்போட்டியில் மேற்குவங்காள அணி வெற்றி

தருமபுரி: 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்ற 65ஆவது தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் மேற்கு வங்காள அணி வெற்றி பெற்று, பரிசுக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

West Bengal team wins in volleyball final
West Bengal team wins in volleyball final

By

Published : Dec 26, 2019, 11:03 AM IST

இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம், தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்ற 65ஆவது தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், புதுச்சேரி, தெலங்கானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கர், ஒடிசா உள்ளிட்ட 29 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

மின்னொளியில், லீக் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளைக் காண திரளானோர் கண்டு களித்தனர். நேற்று நடந்த கால் இறுதிப் போட்டிக்கு முந்தையப் போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின.

நேற்று முன் தினம் இரவு வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், கேரளா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் கால் இறுதிப் போட்டிக்குத் தேர்வு பெற்றன.

தேசிய அளவிலான கைப்பந்து இறுதிப்போட்டி

இதனைத் தொடர்ந்து, அரையிறுதிப் போட்டியில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காள அணிகள் தகுதி பெற்றன. இதில், மகாராஷ்டிராவும், கேரளாவும் மூன்றாவது இடத்திற்கு மோதின. அதில் கேரள அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைத் தட்டிச் சென்றது.

இறுதிப்போட்டியில் தமிழ்நாடு, மேற்கு வங்காள அணிகள் மோதின. இதில் நேர் செட்களில் 23 -25 ,11- 25, 19-25, என்ற நேர் செட் கணக்கில் மேற்கு வங்காள அணி வெற்றிப் பெற்று பரிசுக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

இதையும் படிங்க:

யுவென்டஸை அப்செட் செய்து ’இத்தாலி சூப்பர் கோப்பையை’ வென்ற லாசியோ!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details