தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். அதே பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள காமாட்சி அம்மன் கோயில் நிலம் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பசவராஜ் , காந்தி ஆகியோருக்கும் சொத்து விவகாரத்தில் பிரச்னை இருந்துள்ளது. இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதில் வெங்கடேசனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பசுவராஜ் வெங்கடேசனை கொலை செய்துவிட்டால் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்து கைப்பற்றி விடலாம் என எண்ணினார். இதனையடுத்து கடந்த ஜூலை 19ஆம் தேதி (19.07.19) இரவு கூலிப்படையை ஏவி மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை சாலையில் வெங்கடேசனை வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்தார். சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பசவராஜ் உள்ளிட்டோரை தேடிவந்தனர்.