தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் புதிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்து தொடங்கிவைத்து பேருந்தில் பயணம் செய்தார்.
தருமபுரியில் ஐந்து சொகுசுப் பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர் - தருமபுரியில் 5 சொகுசுப் பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்
தருமபுரி: தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி .அன்பழகன் ஐந்து சொகுசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய சொகுசு பேருந்துகள் தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரி-பெங்களூரு, தருமபுரி-வேலூர் -திருப்பத்தூர், திருப்பத்தூர்-ஆம்பூர்-வேலூர், தருமபுரி- ஓசூர், தருமபுரி -ஓசூர்-பெங்களூரு உள்ளிட்ட 5 வழித்தடங்களில் இயங்கும். இப்பேருந்துகளில் தனியார் சொகுசு பேருந்துகளைவிட கட்டணம் குறைவு.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
TAGGED:
போக்குவரத்துத் துறை