தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெங்கு அறிகுறிகளுடன் 3000 பேர் அனுமதி: சுகாதாரத்துறை இயக்குனர்! - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி

தருமபுரி: தமிழ்நாட்டில் இதுவரை டெங்கு அறிகுறிகளுடன் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

dengue-symptoms

By

Published : Oct 14, 2019, 8:36 AM IST

தருமபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டு தமிழ்நாட்டைவிட கர்நாடகா, ஆந்திராவில் டெங்கு பாதிப்பு அதிகமாகவுள்ளது. இதனால் அம்மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களான ஈரோடு, தருமபுரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது என்றார்.

டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுக்கவும், அதற்கான சிகிச்சைகளை திறம்பட மேற்கொள்ளவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பேசிய அவர், 'காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு காலம் தாழ்த்தாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க:

பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details