தர்மபுரி : கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை 103 அடி நீர் நிரம்பியுள்ளது. கபினி அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.
நீா்வரத்து அதிகரிப்பால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு வந்தடைந்த காவிரி நீர் பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்த காவிரி நீர்
நேற்று முன்தினம் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக காவிரி ஆற்றில் திறந்து விட்டது. இன்று(ஜூலை.24) நண்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு 27 ஆயிரம் கனஅடி நீர் உயா்ந்து வருகிறது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணையில் இருந்து நீா் திறப்பு அதிகரித்துள்ளதால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த ஆண்டில் முதன்முறையாக 27 ஆயிரம் கனஅடி நீர்வரத்து அதிகரித்தது இதுவே முதன்முறை. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணைக்கு செல்லும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு வந்தடைந்த 27 ஆயிரம் கன அடி காவிரி நீர் இதையும் படிங்க: மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு