தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி: கவுன்சிலர் மகள் கொலை வழக்கில் 17 வயது சிறுவன் கைது! - Dharmapuri young girl murder

தருமபுரி அருகே வனப்பகுதியில் திமுக கவுன்சிலர் மகள் சடலம் மர்மமான முறையில் கண்டெடுக்கபட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 8, 2023, 4:54 PM IST

தருமபுரி: தருமபுரி கோல்டன் தெருவைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர், தருமபுரி நகராட்சியின் 8வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருடைய 23 வயதுடைய மகள் ஹர்ஷா. பி.பார்ம் பட்டதாரியான இவர் கடந்த 6 மாதமாக ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அதியமான் கோட்டை அடுத்த கடத்தூரான் கொட்டாய் கோம்பை வனப்பகுதியில் ஹர்ஷா மர்மமான முறையில் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இத்தகவலின் பெயரில் அதியமான் கோட்டை காவல்துறையினர் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பின்பு செல்போன் தொலைத் தொடர்பு மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. சந்தேகத்தின் பேரில் தருமபுரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிறுவன் மற்றும் உயிரிழந்த பெண் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்து தெரிய வந்துள்ளது.

போலீசார் அளித்த தகவலின் படி, "ஹர்ஷாவும் அச்சிறுவனும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். கடந்த 10 மாதத்திற்கு முன்பு அச்சிறுவனின் பிறந்த நாளை தருமபுரி அடுத்த கோம்பை வனப்பகுதியில் நண்பர்களுடன் கொண்டாடி உள்ளனர். இந்நிலையில் ஹர்ஷா தான் வேலை செய்யும் இடத்திலேயே வேறு ஒரு நபரை காதலித்து வருவதாகவும், அவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்ய உள்ளதாக அச்சிறுவனிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.

அச்சிறுவன் ஹர்ஷாவிடம் பல்வேறு காரணங்களை கூறி கட்டாயப்படுத்தி ஓசூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் தருமபுரி அடுத்த கோம்பை வனப்பகுதிற்கு அழைத்து வந்துள்ளான். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், பின்பு ஹர்ஷாவை அச்சிறுவன் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும்" போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுவனை கைது செய்து இந்த கொலையில் வேறு யாரேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆசை காட்டி மோசம் செய்த சகோதரர்கள்; சிட்பண்ட் அலுவலக பூட்டை உடைத்து போலீசார் சோதனை

ABOUT THE AUTHOR

...view details