கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் துணிக்கடை நிறுவனர் வீட்டில் கட்டப்பட்டிருந்த 20 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதியில் அனுமதியின்றி 20 அடி உயரமான சுவர் எழுப்பியவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
’மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ - செந்தில்குமார் எம்.பி. - mettupalayam wall collapsed 17 died
தருமபுரி: மேட்டுப்பாளையம் வீட்டின் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Dharmapuri mp
இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் செந்தில்குமார், விபத்தில் உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழப்பு: வீட்டின் உரிமையாளர் அதிரடி கைது!