தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி பகுதியில் சூதாட்டம் நடந்துவருவதாக அரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, சக்திவேல், கமலநாதன் கொண்ட தனிப்படை போலீசார் கோட்டப்பட்டி அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் சோதனைக்கு சென்றனர்.
தர்மபுரியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது - தர்மபுரியில் கார் பறிமுதல்
தர்மபுரி கோட்டப்பட்டி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூதாடியதாக 15 பேர் கைது; 5 லட்சம் பறிமுதல்
அப்போது, சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். மொத்தமாக 15 பேரை கைது செய்து கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்து ரூ. 5,77,345 ரொக்க பணம், 2 கார்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் 21 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: தருமபுரியில் விவசாயம் செழிக்க காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - ஜி.கே.மணி
Last Updated : Dec 21, 2022, 2:56 PM IST