தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தியாகி சுப்பிரமணிய சிவாவின் 138ஆவது பிறந்தநாள் - நினைவிடத்தில் முக்கியப்புள்ளிகள் மலர்த்தூவி மரியாதை - subramaniyam siva memorial

சுதந்திரப் போராட்டத்தியாகி சுப்பிரமணியம் சிவாவின் பிறந்த நாளையொட்டி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, அவரின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

தியாகி சுப்பிரமணிய சிவாவின் 138ஆவது பிறந்தநாள் - முக்கியப்புள்ளிகள் மலர்த்தூவி மரியாதை
தியாகி சுப்பிரமணிய சிவாவின் 138ஆவது பிறந்தநாள் - முக்கியப்புள்ளிகள் மலர்த்தூவி மரியாதை

By

Published : Oct 4, 2021, 3:24 PM IST

தர்மபுரி: சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா 1884ஆம் ஆண்டு, அக்டோபர் நான்காம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பிறந்தார்.

'சிவம்' எப்படி சுப்பிரமணிய சிவா ஆனார்?

'சிவம்' என்ற இயற்பெயரை மாற்றி, 'சுப்பிரமணிய சிவா' என்று அழைக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, தேச துரோகக் குற்றத்திற்காக சுப்பிரமணிய சிவாவிற்கு, ஆங்கிலேய அரசால் இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். அதன்பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் தொழுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான சிவா, சென்னையில் சில காலம் தங்கியிருந்து மீண்டும் தனது அரசியல் பணியைத் தொடங்கினார். சுப்பிரமணிய சிவா, 'பாரத மாதாவுக்கு ஆலயம் கட்ட வேண்டும்' என தனது நண்பர்கள் உதவியுடன் பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலத்தை வாங்கி வைத்திருந்தார்.

சொந்த நிலத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்ட சுப்பிரமணிய சிவாவின் உடல்

பின்னாளில் அவர் இறந்த பின்பு, அவர் வாங்கி வைத்திருந்த அந்த நிலத்திலேயே 'சுப்பிரமணிய சிவாவின்' உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு அரசால் 'தியாகி சுப்பிரமணிய சிவாவிற்கு' மணிமண்டபம் கட்டப்பட்டது.

பிறந்தநாளில் முக்கியத்தலைவர்கள் மரியாதை

சுப்பிரமணிய சிவாவின் 138ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது மணிமண்டபத்தில் உள்ள படத்திற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி; தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன்; பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன்; பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்; அமைச்சர் மரியாதை !

ABOUT THE AUTHOR

...view details