தருமபுரி: இன்று (ஜூலை 25) தருமபுரி நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா நகர் மன்றக் கூட்ட அரங்கில் நகர மன்றத்தலைவர் லெட்சுமி, நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்களின் வார்டுகளும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள சாலையில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் நகர அமைப்பு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகர் மன்ற உறுப்பினர் முன்னா குற்றம்சாட்டினார்.
தருமபுரி நகராட்சியின் 31வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாதேஷ் பேசும் போது, "நகராட்சி ஆணையாளர் தங்கி இருக்கும் நகராட்சிக்குச் சொந்தமான குடியிருப்பிற்கு புதிய ஏசி மற்றும் வயரிங் பணி குடியிருப்புக்கு வண்ணம் பூச 9 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதனை செயல்படுத்த நகர் மன்றத்தின் அனுமதிக்காக கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.