தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் ஒரே இரவில் 129 மில்லி மீட்டர் மழை! - Dharmapuri District News

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்றிரவு (ஆகஸ்ட் 23) 129 மில்லி மீட்டர் அளவில் பரவலாக மழை பெய்தது.

தருமபுரியில் பரவலாக மழை
தருமபுரியில் பரவலாக மழை

By

Published : Aug 24, 2020, 12:36 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டிப் பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று (ஆகஸ்ட் - 23) பரவலாக மழை பெய்ததினால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் தருமபுரியில் 2 மில்லி மீட்டர் மழையும், பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 மில்லி மீட்டர், பென்னாகரம் பகுதியில் 4 மில்லி மீட்டர், ஒகேனக்கல்லில் 5 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டிப்பகுதியில் 27 மில்லி மீட்டர், அரூர் பகுதியில் மட்டும் 86 மில்லி மீட்டர் என மொத்தம் 129 மில்லி மீட்டர் மழை மாவட்டம் முழுவதும் பெய்தது.

தருமபுரியில் பரவலாக மழை

குறிப்பாக, அரூரில் மட்டும் அதிக அளவு மழை பெய்ததினால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிப்பதினால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:அரியலூரில் இடியுடன் கூடிய மழை

ABOUT THE AUTHOR

...view details