தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமுவேல் என்பவரின் மனைவி ரதி. இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது மாங்கரை அரசினர் மாணவியர் விடுதியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வரும் இவர் 2 மகன்கள் மற்றும் தனது பாட்டியுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
ரதி தனது வீட்டின் கீழ்பகுதியில் உள்ள அறையை பூட்டி விட்டு இரவில் மாடியில் குடும்பத்துடன் சென்று உறங்கியுள்ளார். இன்று காலை வழக்கமாக கீழிறங்கி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.