தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கி ஊழியர் உள்பட 11 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி - தருமபுரி கரோனா எண்ணிக்கை

தருமபுரி: ஒரே நாளில் 11 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளது.

Active corona cases in dharmapuri
தருமபுரியில் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று

By

Published : Jul 1, 2020, 3:13 PM IST

தருமபுரி கடைவீதி அம்பலத்தாடி தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன வங்கி ஊழியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்க இருப்பது உறுதியான நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து வங்கி ஊழியரின் மனைவி, குழந்தை மற்றும் அவரது மாமனார் ஆகியோருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 26 வயதான பெண் செவிலியர், திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை செய்து அரூர் பகுதிக்கு திரும்பிய 26 வயது ஆண், கடத்தூர் தாள நத்தம் பகுதியிலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்று திரும்பிய லாரி ஓட்டுநர், கடலூர் சென்று திரும்பிய பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து மூக்கனுர் பகுதிக்கு திரும்பிய நபருக்கும், சென்னையிலுள்ள தனியார் மசாலா நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்த நபருக்கும், ஜக்கசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர் சென்னைக்கு சென்று திரும்பிய நிலையில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் செக்குமேடு கிராமத்தைச் சார்ந்த நபர் ஆந்திராவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். அவர் சொந்த ஊர் திரும்பியபோது, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 நபர்கள் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 81 நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: தெலங்கானாவில் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details