தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனா முன்னெச்சரிக்கை: தயார் நிலையில் தனிவார்டுகள், ஆம்புலன்ஸ் - dharmapuri corona awarness

தருமபுரி: கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கண்காணிப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

dharmapuri collector malarvizhi
dharmapuri collector malarvizhi

By

Published : Mar 11, 2020, 7:45 PM IST

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் பேசிய மலர்விழி, "தருமபுரியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவனையில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வர தனியாக 108 ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவுவதைத் தடுப்பதோடு, குணப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் மலர்விழி

ஒகேனக்கல் பகுதிக்கு கர்நாடகா, கேரளா எனப் பல மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என்பதைக் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் அவர்கள் அப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்கள், மசாஜ் தொழிலாளர்கள் ஆகியோரைக் காண சுற்றுலாப்பயணிகள் செல்லும்போது கை, கால்களை கழுவி முடிந்தவரை குளித்துவிட்டு செல்வதால், நோய்த்தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள முடியும். பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தங்கள் கைகளை 30 விநாடிகள் நன்றாக கழுவ வேண்டும். கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவும் என்ற தவறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி பேட்டி

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details