தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் கரோனா பரவல் கண்டறிய நாள்தோறும் 100 காய்ச்சல் முகாம் - தருமபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி: கரோனா பரவல் கண்டறிய நாள்தோறும் கிராமங்கள், நகரங்கள் என 100 காய்ச்சல் முகாம் நடைபெற்றுவருகிறது.

தருமபுரியில் கரோனா பரவல் கண்டறிய நாள்தோறும் 100 காய்ச்சல் முகாம்
தருமபுரியில் கரோனா பரவல் கண்டறிய நாள்தோறும் 100 காய்ச்சல் முகாம்

By

Published : Sep 23, 2020, 5:38 PM IST

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்று (செப்டம்பர் 23) மாவட்டத்தில் 125 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களைக் கண்டறிய நாள்தோறும் கிராமங்கள், நகரங்கள் என 100 காய்ச்சல் முகாம் நடைபெற்றுவருகிறது. காய்ச்சல் முகாம்களில் சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்.

கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தின் மூலம் சோதனை செய்கின்றனர்.


ABOUT THE AUTHOR

...view details