தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் 2 கிலோ நெகிழிக்கு 1 கிலோ அரிசி!

தருமபுரி: 2 கிலோ நெகிழிப் பொருள்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் நடைபெற்றுவருகிறது.

1 kg of rice per 2 kg of plastics in Dharmapuri

By

Published : Nov 9, 2019, 5:22 PM IST

தருமபுரியில் பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், இரண்டு கிலோ நெகிழிப் பொருள்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கியது. பொதுமக்களிடம் நெகிழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த முகாம் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த முகாமை பாமகவின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், பசுமைத் தாயகம் அமைப்பின் மாது ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிவைத்தனர். இந்நிகழ்வில் சுமார் 200 கிலோ நெகிழிப் பொருள்களை பொதுமக்கள் வழங்கி, அதற்கு ஈடாக 100 கிலோ அரிசியைப் பெற்றுச்சென்றனர்.

2 கிலோ பிளாஸ்டிக்குக்கு 1 கிலோ அரிசி வழங்கும் நிகழ்வு

தருமபுரியில் இம்முகாம் நான்கு நாள்கள் நடைபெறும் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள நெகிழிப் பொருள்களை வழங்கி அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இம்முகாம் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது போன்ற வாசகம் அடங்கிய பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர்.

இதையும் படிங்க: ’டெங்கு..டெங்கு..டெங்கு...'

ABOUT THE AUTHOR

...view details