தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது! - Youth arrested for sand smuggling in cuddolore

கடலூர்: மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நபரை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு காவலில் கைது

By

Published : Aug 23, 2019, 7:26 AM IST

ஜூலை மாதம், 31ஆம் தேதி வேப்பூர் காவல் நிலைய சரகம் ஐவதுகுடி சமத்துவபுரம் அருகே மணல் கடத்துவதாக, கிராம நிர்வாக அலுவலர் சின்னராஜா, உதவியாளர் மாணிக்கம் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சுமை ஏற்றிச் செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், கூத்தக்குடி கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (39) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே இவர் மீது விழுப்புரம் வரஞ்சரம் காவல் நிலையத்தில் மணல் கடத்தல் வழக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே இவரின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ஆறுமுகம் அப்பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details