தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கு அடிக்க சைடு டிஸ் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி... - சரக்க அடிக்க சைடிஸ் திருடும் இளைஞர்கள் - குச்சி மிட்டாய், பிஸ்கட்களை திருடும் சிசிடிவி காட்சிகள்

கடலூரில் சரக்கு அடிக்க, சைடு டிஸ் வேண்டும் என்பதற்காக மளிகை கடையில் குச்சி மிட்டாய், பிஸ்கட் பாக்கெட் திருடும் இளைஞர்களின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சரக்க அடிக்க சைடிஸ் திருடும் இளைஞர்கள்
பிஸ்கட் பாக்கெட் திருடும் இளைஞர்களின் வீடியோ

By

Published : Oct 15, 2021, 5:17 PM IST

கடலூர்:கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி கடைவீதியில் உள்ள ஆனந்த் மளிகை கடை ஸ்டோருக்கு, இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் வருகின்றனர். கடையின் உரிமையாளர் கடையில் இல்லாததை அறிந்ததும், ஒருவர் நோட்டமிட, மற்றொரு அரைக்கால் சட்டை போட்ட இளைஞர், சரக்கு அடிப்பதற்கு, தேவையான பிஸ்கட் பாக்கெட், குச்சி மிட்டாய், பெப்சி பாட்டில், குளிர்பானங்களைத் திருடிய பின், உடம்புக்குள் ஒளித்து வைத்து, இருசக்கர வாகனத்தில் பறந்து செல்கிறார்.

பிஸ்கட் பாக்கெட் திருடும் இளைஞர்களின் வீடியோ

என்னவொரு சாமர்த்தியம்

பின்னர் எதுவும் தெரியாதது போல், மற்ற இரண்டு இளைஞர்களும், பொருள்கள் வாங்குவது போல் காத்திருந்து, கடை உரிமையாளர் வந்தவுடன், மது குடிக்க தேவையான, கப் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்.

கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: தப்பியோடிய டி23 புலி எருமையைத் தாக்கியதால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details