கடலூர் அருகே அடியாட்கள் வைத்து அண்ணன் வீட்டை இடித்த தம்பி கடலூர்: பண்ருட்டி அடுத்துள்ள கண்டரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், இவரது மனைவி சுமதி (வயது 50) ராதாகிருஷ்ணனின் சகோதரரான சரவணன் வீட்டருகே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவ்வப்போது சுமதிக்கும், அவரது கனவர் ராதாகிருஷ்ணனின் சகோதரரான சரவணனுக்கும் இடையே இடப் பிரச்சினைக் காரணமாக தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (அக். 29) நள்ளிரவில் சரவணன் தனது அடியாட்கள் 5க்கும் மேற்பட்டோரை அனுப்பி கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டுச் சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதியின் குடும்பத்தினர், இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் சுமதியின் வீட்டை இடித்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில், வீட்டினை இடித்து சேதப்படுத்திய 5க்கும் மேற்பட்ட நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக தனது சொந்த அண்ணன் மனைவி வசிக்கும் வீட்டை நள்ளிரவில் மர்ம நபர்கள் வைத்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:கேரளா குண்டுவெடிப்பு: சிசிடிவி காட்சியில் சிக்கிய நீல நிறக் கார்! என்.ஐ.ஏ. தீவிர விசாரணை!