தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை.. இந்தா வாங்கிக்கோ... ஆன்லைன் லோன் மோசடியில் சிக்கித் தவிக்கும் இளம்பெண்கள், இளைஞர்கள்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு மட்டுமின்றி தற்போது ஆன்லைன் மூலம் பைனான்ஸ் பணம் தருவதாகக் கூறி வரும் விளம்பரங்களை நம்பி இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஆன்லைன் பைனான்ஸ் மோசடி : நூதனமான மிரட்டலில் இளம் பெண்கள், இளைஞர்கள் சிக்கித் தவிப்பு
ஆன்லைன் பைனான்ஸ் மோசடி : நூதனமான மிரட்டலில் இளம் பெண்கள், இளைஞர்கள் சிக்கித் தவிப்பு

By

Published : Jun 7, 2022, 1:42 PM IST

Updated : Jun 7, 2022, 2:18 PM IST

கடலூர்: நாடு முழுவதும் தற்பொழுது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் இணையதளங்கள் மூலம் அதிக அளவில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். இதில் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு மட்டும் இன்றி தற்போது ஆன்லைன் மூலம் பைனான்ஸ் பணம் தருவதாகக் கூறி வரும் விளம்பரங்களை நம்பி இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். இது பற்றிய பின்னணி நிலவரம் மாபெரும் திகில் கதையாக உள்ளது.

ஆன்லைனில் சில ஆப் மூலம் தங்களுக்குப் பணம் கடன் வழங்குவதாக ஆசைகாட்டி இழுக்கும் மோசக்காரர்களை நம்பி தற்போது கடலூர் மாவட்டத்தில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

அப்படி ஆன்லைன் மூலம் தங்களுக்குக் கடன் வழங்குவதாகக் கூறி வாட்ஸ்அப் மூலம் ஆதார் எண் மற்றும் புகைப்படத்தைப் பெற்றுக் கொண்டு ஆன்லைன் மூலம் தங்கள் முகத்தைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து கொண்டு தங்களுக்கு வங்கி கணக்கில் பணம் எவ்வளவு செலுத்தப்படும் என தெரிவிக்காமல் அவருடைய வங்கிக் கணக்கில் அவர்களுக்கே தெரியாமல் ரூபாய் 3500 மற்றும் அவரவர்களுக்கு ஏற்ப 12 ஆயிரம் 20 ஆயிரம் என அனுப்பிவிட்டு 3500 கடன் பெற்றவர் இடம் 7000 தர வேண்டும் 24 மணி நேரத்தில் கட்ட வேண்டும் என அவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் இந்த கொள்ளை கும்பல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆன்லைன் லோன் மோசடி

இதுபோன்று குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக வங்கியில் தொடர்பு கொண்டு உடனடியாக அதே வங்கி கணக்கிற்குத் திரும்பி பணத்தை அனுப்பி விட்டாலும் அந்த மோசடி கும்பல் வாட்ஸப்பில் உடனடியாக ரூபாய் 7000 வழங்க வேண்டும் என மிரட்டல் விடுக்கிறது. அப்படி இல்லை எனில் தங்களுடைய தொலைப்பேசியில் உள்ள அனைத்து காண்டாக்ட் நபர்களுக்கு தங்களைப் பற்றி அவதூறாகச் செய்தி அனுப்புவோம் என குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.

அடுத்தபடியாக உடனடியாக அவருடைய புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து அவரது மொபைலில் உள்ள அனைத்து காண்டாக்ட்டுக்கும் ஆபாச படங்களை அவரை அவமானப்படுத்தும் விதமாக சித்தரித்து அனுப்பி மேலும் இது தொடராமல் இருக்க பல்லாயிரக்கணக்கில் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கின்றனர்.

ஆன்லைன் பைனான்ஸ்

இதுபற்றி சைபர் குற்றப்பிரிவில் தகவல் புகார் அளித்துள்ள நிலையிலும் அந்த மோசடி கும்பல் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இதுமட்டுமன்றி கடலூரில் கல்லூரி மாணவியை இதுபோன்று வேறு ஒரு பைனான்ஸ் செய்வதாக ஆன்லைன் மோசடி கும்பல் ரூபாய் 12 ஆயிரத்தை அனுப்பிவிட்டு 2 லட்சம் 3 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டி பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை ஆபாசமாகச் சித்தரித்து அவருடைய மொபைலுக்கு அனுப்பி மிரட்டல்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்று கடலூரில் தற்போது நாள் ஒன்றுக்கு 5 க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் குற்றப்பிரிவு வந்தவண்ணம் உள்ளன எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இணையதளங்கள் மூலம் ஆப் மூலம் கடன் தருவதாகத் தெரிவிப்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் லோன் மோசடி

இதையும் படிங்க: தொடரும் ஆன்லைன் லோன் மோசடி- நூதன முறையில் மிரட்டிய வடமாநில கும்பல்

Last Updated : Jun 7, 2022, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details