கடலூர் மாவட்டம்முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள கீழ் காங்கேயன் குப்பத்தில் அய்யனார் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றிரவு (ஏப்.16) தெருக்கூத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விஜய் உள்பட பல தெருக்கூத்து கலைஞர்கள் வந்தனர்.
தெருக்கூத்து ஆட வந்த இடத்தில் சிறுமியிடம் அத்துமீறல் - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தெருக்கூத்து கலைஞர்
கடலூரில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தெருக்கூத்து கலைஞர் கைது செய்யப்பட்டார்.
தெருக்கூத்து ஆட வந்த இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
இந்த நிலையில், விஜய் அதே பகுதியில் 13 வயது சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்ட சிறுமியின் உறவினர்கள் இளைஞரை அடித்து விரட்டி சிறுமியை மீட்டனர். இதையடுத்து முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் விஜய் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க:அண்ணன் தங்கை உறவு என்பதால் எதிர்ப்பு; உயிரிழந்த காதலி.. உதவிக் கேட்ட காதலன்!