கடலூர் மாவட்டம் அயன்குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் சிலம்பரசன் (30). இவர், கடந்த மே 1ஆம் தேதியன்று நெய்வேலி தில்லைநகர் TVC குடோன் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல், சிலம்பரசனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
பின்னர், அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி சிலம்பரசனிடமிருந்து 1000 ரூபாயை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் சிலம்பரசன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த கும்பலைத் தேடிவந்தனர்.