தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை திருமணம் செய்த இளைஞர்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! - கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர்: சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞரை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இளம் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்: இரண்டு வருடங்களுப் பிறகு கைது
இளம் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்: இரண்டு வருடங்களுப் பிறகு கைது

By

Published : May 20, 2020, 3:26 PM IST

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவா (28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காதலித்தார். இதனையறிந்த பெண் வீட்டார் அவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், தேவா அச்சிறுமியுடன் தலைமறைவானார்.

இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் தேவா தங்கள் மகளைக் கடத்திச் சென்றதாகப் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேவாவைத் தேடிவந்தனர்.

இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தேவா சிறுமியை திருமணம் செய்துகொண்டு, ஒரு வயது கைக்குழந்தையுடன் சொந்த ஊரான காராமணிக்குப்பத்திற்கு வந்துள்ளார்.

இதனையறிந்த நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா, காராமணிக்குப்பத்திற்கு வந்து தேவாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில், "என் மனைவியைக் கடத்தவில்லை, காதலித்து வந்தோம். பெண் வீட்டார் எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு அழைத்துச் சென்று இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.

தற்போது எங்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது" எனக் கூறினார். மேலும், தனது மாமியார் வீட்டில் சமரசம் ஏற்பட்டதால் மீண்டும் காராமணிக்குப்பத்திற்கு தனது மனைவியை அழைத்துவந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததற்காக தேவாவை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தேவாலய வாசலில் காதல் ஜோடி திருமணம்

ABOUT THE AUTHOR

...view details