கடலூர்:விவசாயிகள் தாங்கள் பயிரிடும் விவசாய காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை தாங்களே நேரடியாக கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்று வருகின்றனர். அதனை எளிதில் பொதுமக்கள் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் இயங்கி வரும் தற்காலிக உழவர் சந்தையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட வாழை பழத்தார்களைக் கொண்டு வந்து விற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடலூரில் ஒரு பெண் பத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விரைவில் பழுக்க வைக்க, கேடு விளைவிக்கும் ரசாயன கலவையை தெளித்துள்ளார். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாநில சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.