தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம சபை கூட்டம்: அலுவலரை தாக்கிய பெண் ஊராட்சி மன்ற துணை தலைவர் கைது

கடலூர் அருகே கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி துணை அலுவலரை காலணியால் தாக்கிய பெண் ஊராட்சி மன்ற துணை தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண்  ஊராட்சி மன்ற  துனை தலைவர் கைது
பெண் ஊராட்சி மன்ற துனை தலைவர் கைது

By

Published : May 2, 2022, 12:33 PM IST

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த கண்டமங்கலம் ஊராட்சி மன்றம் சார்பில் நேற்று(மே.1) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் ஊராட்சியில் 6 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர்.

வேளாண்மை துறை சம்பந்தமான திட்டங்கள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, பெண் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசந்திரனை காலணியால் தாக்கியுள்ளார். இதனால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு எதிராக அக்கிராமத்தை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள், கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு உடனடியாக ஊராட்சி துணைத்தலைவர் சரண்யாவை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் ஊராட்சி மன்ற துனை தலைவர் கைது

இச்சம்பவம் பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், சரண்யாவை கைது செய்தனர்.

இதையும் படிங்க:யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது - எடப்பாடி பழனிசாமி கேள்வி?

ABOUT THE AUTHOR

...view details