கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய கனமழை, இன்று (ஆக. 28) காலை வரை நீடித்தது. இதனால் சில இடங்களில் சூறைக் காற்று வீசி மரங்கள் சாய்ந்தன. மேலும், தாழ்வான, பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
கடலூரில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி - மின்னல் தாக்கி உயிரிழப்பு
கடலூர் : மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று (ஆக. 27) இரவு முதுநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது கடலூர் முதுநகர் பெரிய பிள்ளையார் மேடு பகுதியைச் சேர்ந்த பாவாடை சாமி என்பவரின் மனைவி மச்சகாந்தி (வயது 53) தன்னுடைய விளைநிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நிலையில், மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.